உலக புகழ் பெற்ற நடிகர் ஜாக்கிசானுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட செம்பருத்தி சீரியல் நடிகர்.! லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்.

karthi

சின்னத்திரையில் நடிப்பவர் கூட சமீபகாலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்து வருகின்றனர். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த கார்த்திக் ராஜூ ஏற்கனவே மிகப்பெரிய அளவில்  ரசிகர்கள் பட்டாளம் வைத்து இருந்த நிலையில் இந்த சீரியல் அவருக்கு மிகச் சிறப்பான ஒரு அந்தஸ்தை பெற்றுத் தந்தது. இதனால் சின்னத்திரையில் கவனிக்க கூடிய நடிகர்களில் ஒரு மாறி உள்ளார்.

செம்பருத்தி சீரியலில் அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தியதால் அவருக்கு பெண் ரசிகைகள் வளரத்தொடங்கினர். இப்படி செம்பருத்தி சீரியலில் வெற்றிநடை போட்டு வந்த கார்த்திக் திடீரென அதிலிருந்து விலகினார்.

அவருக்கு பதிலாக வேறு ஒரு புதுமுக நடிகர் கமிட் ஆனாலும் அந்த அளவிற்கு அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை அதனை ரசிகர்களும் சமூக வலைதளப் பக்கத்தில் கூறி வருகின்றனர் மேலும் கார்த்திக்ராஜ் செம்பருத்தி சீரியலில் மீண்டும் இணைய வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கார்த்திக் ராஜ் செம்பருத்தி சீரியலுக்கு முன்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலிலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சீரியலில் ரவுண்ட் அடித்த கார்த்திக்கு தற்போது வெள்ளித்திரையில் நடிக்க பட வாய்ப்புகள் குவிகின்றன. அந்த வகையில் ஒரு புதிய படம் ஒன்றில் கமிட்டாகிஉள்ளார்.  அந்த படத்தின் டீஸர் வெளியாகி வேற லெவல் ஹிட்டடித்தது.

இந்த நிலையில் கார்த்திக் ராஜ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகரான ஜாக்கிசானுடன்  இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியது தற்போது இந்த புகைப்படம் வேற லெவெலில் லைக்குகளை பெற்று விளங்குகிறது.

karthi
karthi