சென்னையில் மிகப் பிரம்மாண்டமான புது வீட்டை வாங்கிய செம்பருத்தி சீரியல் நடிகை.! ஹோம் டூர் வீடியோ இதோ..

தமிழ் சின்னத்திரையில் பல தொலைக்காட்சிகள் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்கள் விரும்பும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று தான் ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

வெற்றிகரமாக ஐந்து ஆண்டுகள் மக்களின் அதிக ஆதரவுடன் ஒளிபரப்பாகி வந்தது. மேலும் இந்த சீரியல் தொடங்கியதில் இருந்து இப்பொழுது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் நிலையில் அதற்கு முக்கிய காரணம் இந்த தொடர் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்ததுதான். இந்த சீரியல் தெலுங்கில் வெளிவந்த முத்த மந்தாரம் என்ற சீரியலின் தமிழ் ரீமேக் ஆகும்.

இந்த சீரியலில் கார்த்திக் – ஷபானா இவர்களுடைய கேரக்டர் தான் மிகப்பெரிய வெற்றினை கண்டது இவர்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவான நிலையில் இவர்களுடைய காதலுக்கு ஆப்பு வைத்து வரும் வில்லியாக நடித்து வந்தவர் தான் லட்சுமி. நடிகை லட்சுமி ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஊர் வம்பு என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அதன் பிறகு தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டு சீரியலில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். பிறகு செம்பருத்தி சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நிலையில் இந்த சீரியலில் வனஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். செம்பருத்தி சீரியல் தன்னுடைய சிறந்த நடிப்பை காண்பித்ததால் வில்லியாக இருந்தாலும் கூட இவருடைய கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்தது.

இப்படிப்பட்ட நிலையில் இவர் தன்னுடைய மகனுடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் நிலையில் அதில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவருடைய யூடியூப் சேனலை 7.5 லட்சம் பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் இவர் திருமழிசை பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் புது வீடு ஒன்றை விலைக்கு வாங்கி இருக்கிறார் எனவே அந்த வீட்டில் டூர் வீடியோவை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.