தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் நடிகர் அஜித் தனது 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது அதேபோல தளபதி விஜய் தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகிறது இதன் மூலம் அஜித் விஜய் படங்கள் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர்.
அதுவும் எட்டு வருடம் கழித்து மீண்டும் மோதுவதால் ரசிகர்கள் படத்தை பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட்ஸ் மூவி ரெடியாக இருக்கிறது இதனால் தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகளை துணிவு திரைப்படம் கைப்பற்றும் என தெரிய வருகிறது..
இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளரான வலைப்பேச்சு பிஸ்மி இது குறித்து பேசுகையில் விஜய் தான் இந்த விஷயத்தில் தலையிட்டு வாரிசு திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையை லலித்குமாருக்கு கிடைப்பது போல் பார்த்துக் கொண்டார் என்ற தகவலை கூறுகின்றார் ஆனால் தற்பொழுது துணிவு திரைப்படம் பெரும்பாலான திரையரங்குகளை கைப்பற்றி விட்தல்..
விஜயின் வாரிசு திரைப்படம் சிக்கலில் மாட்டிக்கும் என நினைத்து செவன் ஸ்கிரீன் நிறுவனத்தின் உரிமையாளரான லலித் குமார் வாரிசு திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையை ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனமே கொடுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனமே மறைமுகமாக வாரிசு திரைப்படத்திற்கு உதவு வாய்ப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது.