பொன்னியின் செல்வன் தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.!

ponniyin-selvan-2
ponniyin-selvan-2

மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியினை கண்டது. அந்த வகையில் இந்த படம் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. எனவே இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழுவினர்கள் மேற்கொள்ள இருக்கும் நிலையில் தொடர்ந்து நாள்தோறும் இந்த படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் நேற்று ஜெயம் ரவி பொன்னியின் செல்வனாக நடித்திருக்கும் நிலையில் அவர் எப்படி பொன்னியின் செல்வனாக மாறுகிறார் என்பது குறித்த வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் வருகின்ற 29ஆம் தேதி அன்று இந்த படத்தின் இசையை வெளியிட்டு விழா நடைபெற இருக்கிறது. மேலும் தற்பொழுது இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை எந்த நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தமிழகத்தில் வெளியீட்டு வரும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் தமிழகத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ரிலீஸ் செய்வதற்கான உரிமையை கைப்பற்றியுள்ளது. மேலும் முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்திற்கு அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ் கான், லால் மோகன், ராமன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்துள்ளனர்.