வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையையும் வாங்கிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்..! முடிவுக்கு வந்தது “வாரிசு” “துணிவு” தியேட்டர் பிரச்சனை..!

udhayanithi
udhayanithi

வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் மட்டும் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் என இரண்டு திரைப்படங்களுமே பொங்கல் தினத்தில் போட்டியிட போவதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படங்கள் தற்பொழுது எந்தெந்த தியேட்டரில் வெளியாக போகிறது என்பது மிகப்பெரிய போட்டியாக இருந்து வருகிறது அந்த வகையில் துணிவு திரைப்படத்தினை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளதன் காரணமாக இதற்கு தான் அதிக தியேட்டர் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் தற்பொழுது திடீர் திருப்பம் ஏற்பட்டது போல விஜயின் வாரிசு திரைப்படத்தின் முக்கிய சில ஏரியாக்களை ரெட் ஜாயிண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளார்கள்.

முதலில் வாரிசு திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றியது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் தான் ஆனால் தற்பொழுது அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள் அதாவது சென்னை, செங்கல்பட்டு, கோவை, வட ஆற்காடு, தென் ஆர்க்காடு ஆகிய மாவட்டங்களில் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல்  தற்பொழுது துணிவு திரைப்படத்திற்கும் வாரிசு திரைப்படத்திற்கும் சம அளவு தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என ஏற்கனவே உதயநிதி கூறி இருந்தார் அந்த வகையில் தற்பொழுது வாரிசு திரைப்படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்  பெற்றுள்ளதன் காரணமாக தமிழகத்தில் வாரிசு திரைப்படத்திற்கும் அதிகளவு தியேட்டர் கிடைக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை என்பது தெரிகிறது.