தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா இவர் மறைவிற்கு காரணம் இதுதான் என குரல் கொடுத்த நடிகை தான் ஹேமமாலினி. இவ்வாறு பிரபலமான நமது நடிகை சில்க் ஸ்மிதா ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்தவகையில் இவர் தமிழில் முதன்முதலாக வண்டி சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இதனை தொடர்ந்து கமல் பிரபு ரஜினி என்ற பல்வேறு முன்னணி நடிகர்களின் திரை படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சில்க் ஸ்மிதா நடிக்கும் பொழுது அவருக்கு டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றி வந்தவர் தான் ஹேமமாலினி. அந்த வகையில் சில்க் ஸ்மிதாவுக்கு குரல் கொடுத்தது இவர்தான் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள் ஏனெனில் இவர்கள் இருவரின் குரலும் ஒரே மாதிரி தான் இருக்கும்.
ஹேமமாலினி சில்க் ஸ்மிதா பற்றிய சில விஷயங்களை கூறி உள்ளார். அதாவது சில்க் ஸ்மிதா மிகவும் நல்ல மனசு உள்ள பெண் மேலும் சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட அதிக அளவு எமோஷனல்ஆவர் என்பது குறிப்பிடதக்கது அந்த வகையில் அவர் என்னுடன் நெருங்கிய பழக்கத்தில் இல்லாவிட்டாலும் சந்திக்கும் இப்பொழுது மிகவும் ஓபனாக பேசுவர்.
அந்தவகையில் சில்க்ஸ்மிதா விற்கு சாவித்திரி என்றால் ரொம்ப பிடிக்கும் அவரை போல நடிக்க வேண்டும் என்றுதான் அவருக்கு ஆசை அந்த வகையில் வித்தியாசமான வேடத்தில் நடிக்க ஆசை பட்ட நிலையில் அவரை கவர்ச்சி நடிகையாக மாற்றிவிட்டார்கள்.
அந்த வகையில் தற்போது கூட நடிகை சில்க் ஸ்மிதாவை அனைவரும் கவர்ச்சி நாயகியாகவே பார்த்து வருகிறார்கள். அந்தவகையில் அவர் உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக அவள் சின்ன சின்ன எமோஷனல் ஆகும் போதெல்லாம் மிகவும் கோபப்படுவார் இதுவே அவருடைய மறைவிற்கு காரணமாக அமைந்திருக்கும் என நான் நினைக்கிறேன்.