புதிய படத்தில் வில்லனாக நடிக்க ரெடியான எஸ். ஜே. சூர்யா – கதை கேட்க மட்டுமே 10 மணிநேரம் எடுத்துக்கொண்ட சம்பவம்.

s.j. surya
s.j. surya

இயக்குனர் எஸ் ஜே சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லனாக மாறி மாறி தொடர்ந்து நடித்து வருவதால் தற்போது முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். மேலும் பிசியான நடிகராக உள்ளார் அதிலும் குறிப்பாக ஹீரோ என்ற கதாபாத்திரத்தையும் தாண்டி வில்லன் ரோலில் தற்போது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி வருகிறார்.

இவரது நடிப்பை பார்த்து படங்களில் புக் செய்ய இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் காத்துக் கொண்டு இருக்கின்றனராம் அந்த அளவிற்கு தற்போது மாறி உள்ளார் எஸ். ஜே. சூர்யா. தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக வெற்றியைக் கண்டார் இவரது நடிப்பு பெரிய அளவில் மக்களைக் கவரவில்லை இதை உணர்ந்துகொண்ட எஸ் ஜே சூர்யா .

சிறு இடைவேளைக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், வில்லனாகவும் கொடுக்கப் பட்ட கதாப்பாத்திரத்தில் பின்னி பெடலெடுத்தார் அண்மையில் கூட வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு  படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டினார். அதனைத் தொடர்ந்து தற்போது விஷாலின் 33வது திரைப்படமான மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதற்காக அவர் 5 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கியிருக்கிறார் இந்த படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது இந்த படத்தின் கதையை முதலில் ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன பின்பு இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் இந்த படத்தின் கதையை கேட்க சுமார் 10 மணி நேரம் எடுத்துக் கொண்டாராம் சூர்யா.

நல்ல கதை கேட்க திரும்ப பிடிக்கும்  அதனால் இந்த படத்தின் கதையை கூட முழுவதும் கேட்டாராம் படத்தின் கதை சிறப்பாக இருந்த காரணத்தினால் இந்த படத்தில் நடித்தே தீர வேண்டும் என ஒத்த காலில் இருக்கும் எஸ் ஜே சூர்யா மார்க் ஆண்டனி திரைப்படம் எஸ். ஜே. சூர்யாவுக்கு இன்னொரு மாநாடு படமாக இருக்கும் என தெரியவந்துள்ளது அந்த அளவிற்கு படத்தின் கதை சூர்யாவுக்கு பிடித்துள்ளதாம்.