சந்திரமுகி 2 படத்தில் நடிக்க ரெடி – குருவிடம் ஆசீர்வாதம் வாங்கிய ராகவா லாரன்ஸ்.! ரசிகர்களை கவர்ந்து இழுத்த புகைப்படம்.

ragava-lawrence
ragava-lawrence

ராகவா லாரன்ஸ் சினிமா உலகில் நடன இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் காரணமாகவே ஒரு கட்டத்தில் நடிகராக கால் தடம் பதித்து  lதொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தாலும் போகப்போக நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து படம் பண்ண எந்த ஒரு தயாரிப்பாளரும் இயக்குனரும் விரும்பவில்லை.

ஒரு கட்டத்தில் தானே படங்களை  இயக்கி நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் காஞ்சனா சீரிஸ் ராகவா லாரன்ஸை வேற லெவலில் தூக்கி நிப்பாட்டியது. அதன் பிறகு ராகவா லாரன்ஸுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது தற்பொழுது அவரது கையில் ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2 ஆகிய படங்கள் இருக்கின்றன.

தற்போது ரஜினி நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகம் உருவாகிறது இதில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். சந்திரமுகி முதல் பாகத்தை எடுத்த இயக்குனர் பி. வாசு இந்த படத்தையும் இயக்குகிறார். மிக பிரம்மாண்ட பொருட்செலவில்  லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறது.

இந்த படத்தின் சூட்டிங் மைசூரில் எடுக்கப்பட இருக்கிறது தற்பொழுது அங்கு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வடிவேலு, லட்சுமிமேனன் மற்றும் பல பிரபலங்கள் படத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் திரில்லர் கலந்த ஒரு படமாக உருவாகும் என தெரிய வருகிறது.

ராகவா லாரன்ஸ் தனது படத்தை தொடங்கும் போது எப்பொழுதும் ரஜினி இடம் ஆசிர்வாதம் வாங்குவது உண்டு அந்த வகையில் தனது குருவான ரஜினியை சந்தித்து நடிகர் ராகவா லாரன்ஸ் ஆசீர்வாதம் பெற்றுள்ளார் அதன் புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.