விஜய்க்காக கோடிகோடியாக கொட்ட ரெடியான தயாரிப்பாளர்.! அப்போ சம்பளம் எவ்வளவு இருக்கும்.

vijay
vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமாவிற்கு வாரிசு நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு பல வெற்றி படங்களை தந்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்து தற்போது உச்ச நட்சத்திரமாக வலம் வந்தாலும் மற்ற மொழித் திரைப்படங்களில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.

ஆனால் தற்போது இவருக்கு தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமாவில் நடித்தால் ஒரு இயக்குனர் அதிக சம்பளம் தருவதாக கூறி உள்ளார். இந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய் 80 கோடி சம்பளம் வாங்கியதாகவும் பிறகு கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டு மீதி சம்பளத்தை கொரோனா நோயாளிகளின் படுக்கை அறைகளுக்கு கொடுத்து விட்டதாகவும் தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் தற்பொழுது தளபதி விஜய் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் விஜயின் 66வது திரைப்படத்தை இயக்குவதற்காக விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் நடிகர் கார்த்திக் மற்றும் தமன்னா உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருந்த தோழன் திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைட்டிப்பள்ளி தான் தற்போது தளபதி 66 திரைப்படத்தையும் இயக்குவதற்கு  வாய்ப்பு கேட்டு வருகிறார். இவரைத் தொடர்ந்து இத்திரைப்படத்தை தில் ராஜீ தெலுங்குகில் தயாரிக்க உள்ளாராம்.

இந்த வகையில் இத்திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 150 கோடியில் மிரட்டல்களை உள்ளடக்கிய படமாக அமையும் என்றும் கூறியுள்ளார்கள். இதில் தளபதி விஜய்க்கு 90 கோடி சம்பளம் தருகிறார்கள். இந்நிலையில் தளபதி விஜய் நீண்ட காலங்களுக்கு பிறகு தெலுங்கு தயாரிப்பாளர் உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ள அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இதனைப் பற்றிய அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.