தனது அப்பா டி ராஜேந்தர் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவர் சிம்பு. பிறகு ஹீரோவாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தன்னை ஒரு முன்னணி நடிகராக மாற்றிக் கொண்டார். ஒரு கட்டத்தில் இவர் நடித்த படங்கள் தொடர் தோல்வி அடைந்ததால் சினிமா பக்கமே சிறிது காலம் தென்படவில்லை..
இதனால் சிம்புவின் சினிமா வாழ்க்கை முடிந்தது என பலரும் சொல்லினர் ஒரு வழியாக மீண்டும் கம்பேக் கொடுத்து தொடர்ந்து மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து தன்னை மீண்டும் வெளிக்காட்டினார். தற்பொழுது கூட பத்து தல மற்றும் பெயிரிடப்படாத ஒரு சில படங்களில் கமிட்டாக உள்ளார்.
திரை உலகில் மீண்டும் ஜொலித்து வரும் சிம்பு தற்போது 40 வயதை எட்டி இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள முடியும் இருக்கிறார் அதற்கு காரணம் இவர் பல நடிகைகளை காதலித்து அப்படியே வாழ்க்கையை ஓட்டிவிட்டார். இதுவரை சிம்பு நயன்தாரா, ஹன்சிகா, நிதியா அகர்வால் போன்றவர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார்.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. பெரிய அளவில் பேசப்பட்டது. 40 வயதாகியும் சிம்பு சிங்களாக இருப்பது பெற்றோர்களுக்கு ரொம்பவும் மனவேதனையை கொடுத்தது இதனால் அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஒரு வழியாக முடிவெடுத்தது.
தொடர்ந்து பெண் தேடி வந்தனர் இந்த நிலையில் தான் ஒரு பெண்ணை பார்த்துள்ளனர் அந்த பெண் வேறு யாரும் அல்ல.. இலங்கை சார்ந்த STR யின் தீவிர ரசிகை ஒருவரை தான் நடிகர் சிம்பு திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.