நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெற்று வருகிறார், ரசிகர்களிடம் விஷ்ணு விஷாலை அடையாளம் காட்டியது இயக்குனர் ராம்குமாருக்கு அதிக பங்கு உண்டு ஏனென்றால் முண்டாசுப்பட்டி ராட்சசன் ஆகிய திரைப்படங்களின் மூலம் விஷ்ணு விஷாலை சினிமாவில் தூக்கி நிறுத்தியவர்.
இவர் இயக்கிய இந்த இரண்டு திரைப்படங்களும், முதலுக்கு மோசம் இல்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது, இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கப்போவதாக கோலிவுட் வட்டாரத்தில் இருந்து கிசுகிசுப்பு வரத் தொடங்கிவிட்டது.
இதனால் இதில் ரசிகர் ஒருவர் இரண்டு படங்களின் வெற்றியை பற்றியும் ஒரு மீம்ஸ் கிரியேட் செய்து விஷ்ணு விஷாலுக்கு ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் அதனை பார்த்த விஷ்ணுவிஷால், இயக்குனர் ராம்குமார் உடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணையலாமா என்பதைப்போல் விஷ்ணு விஷால் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் இந்த கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது அதிகமாக இருக்கும் எனவும் வில்லனாக நடிக்க டேனியல் பாலாஜி மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்கிறார்கள். ஏற்கனவே சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தனுஷ் நடிக்க இருந்த திரைப்படத்திலிருந்து ராம்குமாரை நீக்கிவிட்டதாக தகவல் வெளியான நிலையில் அதனால் இந்த திரைப் படத்தில் இணைய இருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.
மேலும் விஷ்ணு விஷால் கைவசம் ஃபயர் காடன், ஜகஜால கில்லாடி ஆகிய திரைப்படங்கள் தனது கைவசம் வைத்துள்ளார்.