பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர் முடிவில் 226 ரன்கள் எடுத்துள்ளது. 227 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் ஆர் சி பி அணி விளையாடி வருகிறது.
தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் டூப்ளிசி தலைமையிலான பெங்களூர் அணியும் நேருக்கு நேராக மோதி வருகின்றன. இந்தப் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்த நிலையில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துவக்க வீரர்கள் ஆன டெவன் கான்வேவும் ருத்ராட்சும் களம் இறங்கினார்கள் இதில் ருத்ராஜ் 3 ரன்கள் எடுத்திருந்த பொழுது தன்னுடைய விக்கெட்டை இழந்தார். மூன்றாவதாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வந்த ரகானே 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பிறகு கூட்டணி சேர்ந்த டெவன் மற்றும் சிவம் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆர் சி பி பந்துவீச்சை சிதறடித்தார்கள்.
25 பந்துகளில் அரசாதம் அடித்த சிவம் 27 பந்துகளில் 5 சிக்ஸர் இரண்டு பவுண்டரி அடித்து 52 ரண்கள் எடுத்த பொழுது தன்னுடைய விக்கெட்டை இழந்தார். 32 பந்துகளில் அரை சதம் கடந்து அதிக நேரம் தாக்கு பிடித்து தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் டெவன் இவர் 45 பந்துகளில் மூணு சிக்ஸர் மற்றும் ஆறு பவுண்டரிகள் எடுத்து 83 ரன்கள் எடுத்த பொழுது தன்னுடைய ஆட்டத்தை இழந்தார்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட்களை இழந்து 20 ஓவர் முடிவில் 226 ரன்கள் எடுத்தது.
இதன் நிலையில் ஹசரங்காவின் பந்துவீச்சில் ரஹானா தன்னுடைய விக்கெட்டை இழந்தார் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக்கி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்