நடிகர் தனுஷ் நடிகனாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆனால் படங்களை இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் சமீப காலமாக, அந்த வகையில் தனுஷ் ராயன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் இன்று திரையில் வந்துள்ளது.
படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா செல்வராகவன் சந்திப் கிஷன் காளிதாஸ், ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா, என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். தனுசுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். அதேபோல் செல்வராகவனை தனுஷ் எந்த அளவு பயன்படுத்தி உள்ளார் என்பதை இந்த படத்தில் காணலாம்.
ஏ ஆர் ரகுமான் இசையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது ரசிகர்களை இந்த திரைப்படம் எந்த அளவு பூர்த்தி செய்துள்ளது என்பதை இங்கே காணலாம்.
தனுஷின் தந்தை தாய் இருவரும் டவுனுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு தன்னுடைய இரண்டு தம்பியையும் பார்த்துக்கொள் தங்கையையும் பார்த்துக் கொள் என கூறிவிட்டு செல்கிறார்கள். ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும் யாரும் வரவில்லை. உடனே ஊர் பூசாரியை சந்தித்து உதவி கேட்கிறார்கள்.
அந்த ஊர் பூசாரி தனுஷின் தங்கையை வேறொருவரிடம் காசுக்காக விலை பேசி விற்க பார்க்கிறார். இதனை அறிந்து கொண்ட தனுஷ் கையில் அறிவாலை எடுத்த பூசாரியை போட்டு த்ளுகிறார் சிறுவயதிலேயே ரத்தம் பார்க்க ஆரம்பித்த தனுஷ் அந்த ஊரில் இருந்து தப்பித்து சென்னைக்கு தன்னுடைய தம்பிகள் மற்றும் தங்கையுடன் வருகிறார் அங்கு செல்வராகவனை எதற்கு சந்திக்க செல்வராகவன் அடைக்கலம் கொடுக்க பிறகு புதிய ஊரில் புதிய வேலையையும் தேடிக் கொள்கிறார்.
காலம் கடக்க நான்கு பேரும் இளைஞனாக மாறுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில் தனுஷின் பெரிய தம்பி கிஷனால் ஒரு பிரச்சனை வெடிக்கிறது சென்னையில் பெரிய தாதாவாக இருக்கும் துறை என்பவரின் மகனை சந்திப் கிஷன் போட்டு தள்ள இதனால் சந்திப் கிஷனை கொள்ள வேண்டும் என பெரிய தாதா முயற்சி செய்கிறார் அதிலிருந்து எப்படி தன்னுடைய தம்பியை தக்க வைக்கிறார் காப்பாற்றுகிறார் தனுஷ் என்பதுதான் படத்தின் மீதி கதை.
தனுஷ் இந்த திரைப்படத்தை திறம்பட இயக்கி அனைவரையும் வியக்க வைத்து விட்டார் அது மட்டும் இல்லாமல் செல்வராகவனை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார் திரைக்கதையில் எந்த ஒரு தோய்வும் இல்லாமல் படத்தை பரபரப்பாக கொண்டு சென்றுள்ளார். மேலும் துஷாரா விஜயனின் நடிப்பு மிரட்டுகிறது மேலும் எஸ் ஜே சூர்யா வில்லனாக மிரட்டியுள்ளார் அடாவடி வில்லனாக இல்லாமல் பொறுமையாக பேசி செயல்படும் வில்லனாக நடித்துள்ளார்.
செண்டிமெண்ட் மற்றும் ஆக்சன் காட்சிகள் படத்திற்கு பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது அதேபோல் ரத்தம் தரிக்க தரிக்க அனைத்து சண்டை காட்சிகளும் அற்புதம் கிளினிக்கில் நடக்கும் சண்டை காட்சி வெறித்தனம். ஹாலிவுட் தரத்தில் இந்த திரைப்படம் இருந்தாலும் குழந்தைகள் காணும் திரைப்படமாக அமையவில்லை மேலும் ஏ ஆர் ரகுமானின் இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
ஆக மொத்தத்தில் படத்தில் பெரிதாக சலிப்பு எதுவும் தட்டவில்லை படம் தனுஷ் ரசிகர்களை மட்டுமல்லாமல் இதர தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.