தேனிலவுக்கு தங்க கட்டிலா..? ஆசை மனைவிக்காக ரவீந்திரன் கொடுக்கும் ஆடம்பர அலப்பறைகள்..!

raveendar
raveendar

பிரபல தயாரிப்பாளராக தமிழ் திரை உலகில் வலம் வருபவர் தான் தயாரிப்பாளர் ரவீந்திரன். இவரைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அந்த வகையில் இவர் திரைப்படங்கள் தயாரித்து பிரபலமானதை விட வனிதாவை பற்றி பேசி பிரபலமானது தான் அதிகம் என்றே சொல்லலாம்.

அந்த வகையில் வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்ட பொழுது அவரைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளியீட்டு சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்தார் இந்நிலையில் ரவீந்தர் வனிதா செய்த அதே போன்ற செயலை தற்போது இருவரும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ரவீந்திரன் பிரபல நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார் அப்போதிலிருந்து இவருடைய திருமண போட்டோஸ் சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி வெளியாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் பேட்டி போட்டோ சூட் என திருமணம் முடிந்த கையோடு பிஸியாகவே இருந்து வந்தார்கள்.

இப்படியே போனால் தேன் நிலவுக்கு நேரம் ஆகிவிடும் என்ற காரணத்தினால் தற்பொழுது மகாபலிபுரத்தில் தங்களுடைய தேன் நிலவை கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் அவருடைய மனைவிக்கு பல்வேறு பரிசு பொருட்களை அர்ப்பணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த வகையில் அவர் கொடுத்த பரிசு பொருட்கள் என்னவென்றால் தங்கத்திலான கட்டில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்ட மாளிகை 300க்கும் மேற்பட்ட பட்டுப்புடவைகள் என ஏராளமான நகைகள் போன்ற பல்வேறு பரிசு பொருட்களை தனது மனைவிக்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வெளிவந்த தகவலை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரிடம் எவ்வளவுதான் சொத்து இருக்கிறது என்று தெரியவில்லை அது மட்டும் இல்லாமல் நமது நடிகை மீது இவருக்கு இவ்வளவு காதலா என பலரும் சமூக வலைதள பக்கத்தில் பேசி வருகிறார்கள்.