சமீப காலங்களாக தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இவர்களுடைய திருமணம் பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாவது வழக்கமாக இருந்து வருகிறது மேலும் இந்த காதல் ஜோடிகளும் இளம் காதல் ஜோடிகளை ஓவர் டேக்ஸ் செய்யும் அளவிற்கு ஜாலியாக இருந்து வருகிறார்கள்.
மேலும் இணையதளத்தில் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வரும் இவர்களை வைத்து விஜய் டிவி தங்களுடைய டிஆர்பியை ஏற்ற வேண்டும் என்பதற்காக வந்தால் மகாலட்சுமியே என்ற என்டர்டைன்மெண்ட் நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்கள் மேலும் இவர்களுக்கு அந்த நிகழ்ச்சியில் விதவிதமான டாஸ்க்கள் நடக்கப் பட்டது சர்ச்சைக்குரிய கேள்விகள் பலவற்றிற்கும் சகிக்காமல் பதிலளித்து இந்நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு சென்றார்கள்.
இதனை தொடர்ந்து சீரியல் நடிகையான மகாலட்சுமி பணத்திற்காகத் தான் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாக பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில் இந்நிகழ்ச்சியின் மூலம் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் புரிதலின் பிறகுதான் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதை அனைத்து ரசிகர்களுக்கும் புரிய வைத்தார்கள்.
இந்நிலையில் ரவீந்தர் கையில் கொடுக்கப்பட்ட பொருள்களை வைத்து மகாலட்சுமிக்காக கவிதை சொல்ல வேண்டும் என்ற டாஸ்க் ரவீந்தருக்கு கொடுக்கப்பட்டது. எனவே முதலில் ரவீந்தர் கையில் அல்வா கொடுத்ததும் நான் சுவைத்த இனிப்பில் மகாலட்சுமி விட கம்மி தான் இந்த அல்வாவின் சுவை என்று அவர் கூறியது 90ஸ் கிட்ஸ்களை வெறுப்பேற்றும் வகையில் இருந்தது.
இதனைத் தொடர்ந்து மல்லிகை பூ கொடுக்க இந்த மல்லிகை பூ வாடலாம் ஆனால் உன் மீது நான் வைத்திருக்கும் பாசம் வாடாது என்ற சினிமா டயலாக்கை கூறியிருந்தார் எனவே இந்த நிகழ்ச்சியின் மூலம் ஓவராக இவர்கள் சீன் போட்டுள்ளார்கள். மேலும் ரவீந்தருக்கு இப்படி ஒரு அழகான மனைவியா என பலரும் ஆச்சரியப்பட்டார்கள் மேலும் பணம் பாதாளம் வரை பாயும்; பணம் பத்தும் செய்யும் போன்ற பழமொழிகளையும் இவர்கள் கூறியிருந்தார்கள்.