அண்மைகாலமாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வருகின்றனர் அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஒருவழியாக கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி அனைவரது முன்னிலையிலும் திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு இந்த ஜோடி சினிமா நேரம் போக வாழ்க்கையே குதூகலமாக கொண்டாடி வருகின்றனர் இவர்களை தொடர்ந்து இணையதளத்தை அதிர விட்டு வரும் ஜோடி என்றால் அது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தான் இந்த ஜோடி திருப்பதியில் கல்யாணம் செய்து கொண்டது அதன் பிறகு இந்த ஜோடி தொடர்ந்து டால்மியாபுரம் பக்கம் உள்ள குலதெய்வ கோயிலுக்கு போய் வந்தது.
அதனை தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோயில் என ஊர் சுற்றுகிற புகைப்படங்கள் அனைத்துமே வேற லெவலில் வைரலாகின இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இந்த ஜோடியை அதேசமயம் பல பேட்டிகளும் கொடுத்து வருகிறது. இதனால் இந்த ஜோடி நாளுக்கு நாள் பிரபலம் அடைந்து வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் மகாலட்சுமி செய்த தவறை சுட்டிக்காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரவீந்தர் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. மகாலட்சுமி வீட்டில் தண்ணீர் ஊற்றி இரண்டு முட்டைகளை வேக வைத்துள்ளார் ஆனால் தண்ணீர் வற்றி முட்டையை கருகும் அளவிற்கு சென்று விட்டது.
இந்த புகைப்படத்தை ரவீந்தர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியீட்டு முட்டை கருகி போச்சு என கூறி கமெண்ட் அடித்து உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இப்படி ஒரு பொண்டாட்டியா என கூறி வருத்தப்பட்டு வருகின்றனர்.. இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..