சின்னத்திரையில் பிரபல ஜோடிகளான ரவீந்தர் – மகாலட்சுமி இருவருக்கும் திருமணம் ஆகிய இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில் தற்பொழுது இந்த ஜோடி ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லி உள்ளார்கள் அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரன் அவர்களை ஒன்றரை வருடங்களுக்கு மேலாக காதலித்து கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் திருமணம் செய்து கொண்டார்கள்.
இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால் ஆரம்பத்தில் இருந்து ரகசியமாக இவர்களுடைய காதல் வைக்கப்பட்டு இருந்தது பிறகு தங்களுடைய குடும்பத்தினர்கள் சமதத்துடன் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்கள். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ரவீந்தர் வெளியீட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். மேலும் கைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பலரும் இவர்களை விமர்சித்து வந்தார்கள்.
அந்த வகையில் மகாலட்சுமி இவரை காசுக்காக தான் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் அதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் பல பேட்டிகளில் தன்னுடைய சம்பளத்தை பற்றி இந்த ஜோடிகள் கூறியிருந்தார்கள். குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த இவர்கள் எந்த விஷயமாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
ஒருபுறம் இவர்களை விமர்சனம் செய்து வந்தாலும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத மகாலட்சுமி மற்றும் ரவிதர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மாதம் ஆகும் நிலையில் இருவரும் ஜோடியாக குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார்கள் அதாவது இந்த ஜோடி புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்களாம். அந்த காரின் விலை இந்திய மதிப்புக்கு ரூபாய் 35 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்த வீடியோவை மகாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர ரசிகர்கள் இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறிய வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து ரவீந்தர் ‘வாழ்க்கை முழுக்க நாம நேசிக்கிற மாதிரி ஒரு நபர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.. அப்படி நேசிக்கிற நபர் நமக்கு பொண்டாட்டியா வந்தா அது பெரிய அதிர்ஷ்டம்.. அப்படி நமக்கு கிடைத்த பொண்டாட்டிய கூட்டிட்டு சுத்த சொர்க்கம் மாதிரி ஒரு கார் கிடைச்சாச்சு என குறிப்பிட்டுள்ளார்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..