6 வது மாதத்தில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ரவீந்தர்..! உச்சி கொட்டிக் கொண்டு வாழ்த்தும் ரசிகர்கள்..!

raveendar
raveendar

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வளம் வந்தவர் மகாலட்சுமி. இவர் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்பொழுது ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து இருந்தார். இந்த நிலையில் திடீரென பிரபல தயாரிப்பாளர்ரான ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார் கடந்த சில மாதங்களாகவே இவர்களின் திருமண பேச்சு தான் சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டு இருந்தது.

சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமாக பேசப்படும் மகாலட்சுமி கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கிய மகாலட்சுமி இவரின் இரண்டாவது திருமணமும் சர்ச்சையை சந்தித்தது  தயாரிப்பாளர் ரவீந்தரை பணத்திற்காக தான் திருமணம் செய்து கொண்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது இதையெல்லாம் காதில் வாங்காமல் இருவரும் ஜாலியாக வாழ்ந்து வருகிறார்கள்.

மகாலட்சுமி ஏற்கனவே அணில் என்பவருடம் திருமணம் ஆகி சச்சின் என்ற மகன் இருக்கிறார் இருந்தாலும் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும்  சமூக வலைதளத்தில் அடிக்கடி தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை பதிவு செய்து வந்தார்கள் அந்த வகையில் தங்களுடைய ஆறாவது மாத திருமண நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.

அப்படி இருக்கும் நிலையில் ரவீந்தர் மஹாலக்ஷ்மி வீட்டில் ஒரு நல்ல விசேஷம் ஒன்று நடந்துள்ளது. அதாவது தங்களது வீட்டில் சாண்டி ஹோமம் நடத்தியுள்ளார்கள் இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவின்தார் பகிர்ந்து உள்ளார் அதில் அவர் கூறியதாவது தங்கள் மீது அன்பு செலுத்தும் அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் இவரின் இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது அது மட்டும் இல்லாமல் பல ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.

அதிலும் ஒரு சில ரசிகர்கள் வேற ஒரு குட் நியூஸ் சொல்லுவீங்கன்னு நினைத்தோம் ஆனால் இப்படி சொல்லி விட்டீர்கள் என உச்சிக்கொட்டி கொண்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்..