தமிழ் திரைவுலகில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் ரவீந்தர் சந்திரசேகரன் சமீபத்தில் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி ஒன்றை வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்தைப் பற்றி தற்பொழுது வரையிலும் தொடர்ந்து ஏராளமான விமர்சனங்கள் வெளியாகி வருகிறது ரவீந்தர் லிப்ரா ப்ரோடுக்ஷன் மூலம் சுட்ட கதை, நலனும் நந்தினியும், தொலைநோக்கு பார்வை, கல்யாணம், முருங்கக்காய் சிப்ஸ் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
மேலும் யூடியூப் பிக்பாஸ் குறித்து ஏராளமான விமர்சனங்கள் கொடுத்து வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை இவர் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் இவர்களை பற்றி சர்ச்சையான விஷயங்கள் ஏராளமானவை வெளியாகி வருகிறது. அதாவது நடிகை மகாலட்சுமி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.
பிறகு விவாகரத்து பெற்றுள்ள நிலையில் இவர் சமீபத்தில் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுடைய திருமணம் திருப்பதியில் மிகவும் பிரம்மாண்டமாக பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்றது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் பல யூடியூப் சேனல்களில் ரவீந்தரும் மகாலட்சுமியும் பேட்டியளித்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு இதற்கு மேல் எங்களுடைய வாழ்க்கையை கவனிக்கப் போகிறோம் உடல் ரீதியான விமர்சனங்களை இனிமேல் யாரைப் பற்றியும் கூறாதீர்கள் மேலும் இது மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் மகாலட்சுமி கூறியிருந்தார். இப்படிப்பட்ட நிலையில் திருமணம் முடிந்த கையோடு இவர்கள் தங்களுடைய ஹனிமுனை கொண்டாடி வந்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மகாலட்சுமி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் நடித்து வருகிறார்.
எனவே சமீபத்தில் ரவீந்திரன் மகாலட்சுமிக்காக உணவு கொண்டு போய் கொடுக்கிறார் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் மகாலட்சுமிக்கு இன்று நான் டெலிவரி வாயாக மாறினேன் எனவும் ரவீந்தர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது பதிலில் அன்பே வா சூட்டிங் ஸ்பாட் என் பொண்டாட்டிக்கு சரியான நாள் புரட்டாசி ஒன்று. சைவ சாப்பாடு கொடுத்த என் அம்மாவுக்கு நன்றி ரொம்ப நாளுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை ஏதாவது நல்லது செய்வதில் மகிழ்ச்சி நான் டான்ஸ் ஷோவில் சேர்வதை அம்மா உறுதி செய்தார் என குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து மகாலட்சுமி அத்தைக்கு நன்றி சாப்பாடு மிகவும் அருமையாக இருந்தது என கூறியுள்ளார்.