தமிழ் சினிமாவில் படங்களை தயாரித்து வரும் ரவீந்தர் தனது லிப்ரா ப்ரொடேக்ஷன் மூலம் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார் அந்த வகையில் நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ், உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் சொந்தமாக ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார். அந்த வகையில் தனது youtube சேனலில் சினிமா மற்றும் சீரியல்கள் குறித்து விமர்சனங்களை செய்து வருகிறார்.
இந்த நிலையில் ரவீந்தர் தயாரித்த விடியும் வரை காத்திரு என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர்தான் நடிகை மகாலட்சுமி இந்தத் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருக்கிறது. அதன் பிறகு இரண்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த செப்டம்பரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய அந்த ரகசிய திருமண புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என அறிவித்திருந்தனர்.
இவர்களுடைய திருமண புகைப்படம் வெளியானபோது ரவீந்தரை மகாலட்சுமி பணத்திற்காக தான் திருமணம் செய்தார் என்ற விமர்சனம் எழுந்து இருந்தது அதையெல்லாம் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்களுடைய வேலைகளை செய்து வந்தனர். அது மட்டுமல்லாமல் முதன்முறையாக காதலிப்பது போல் இருவரும் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
அந்த வகையில் ரவீந்தரும் மகாலட்சுமியும் பல ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் விமர்சனங்களை ஏற்படுத்த இருந்தாலும் தங்களுடைய புகைப்படத்தை வெளியிடுவதை நிறுத்தவில்லை.
அந்த வகையில் தற்போது ரவீந்தரும் மகாலட்சுமியும் ரொமாண்டிக் செய்யும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த சிலர் இதேபோல என்றென்றும் நீடித்து வாழ வேண்டும் என்று கமெண்ட் பக்கத்தில் கமெண்ட் தெரிவித்து இருக்கின்றனர்.
இதோ அந்த புகைப்படம்…