பிரைவேட் ஜெட் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி..! ரசிகர்கள் அதிர்ச்சி.

mahalaxmi
mahalaxmi

திரை உலகில் இருக்கும் பலரும் அண்மைக்காலமாக அதே தொழிலில் ஈடுபடும் பலரையும் பிடித்து போய் திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்க்கையை என்ஜாய் செய்து வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு தற்போது சினிமாவையும் வாழ்க்கையையும் என்ஜாய் செய்து வருகிறார்.

அவரை தொடர்ந்து சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தற்பொழுது வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்க பலரும் வாழ்த்தினாலும் ஒரு சிலர் விமர்சித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இருப்பினும் எதிர்மறையான விமர்சனங்களை கூட பாசிட்டிவாக எடுத்து கொண்டு இந்த ஜோடியை பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஜோடி ஹனிமூணு செல்வதற்கு முன்பாக தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். அதை பார்த்த பலரும் எப்போது ஹனிமூன் போகிறீர்கள் என்று கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரும் விமானத்தின் அருகில் நின்றபடி செல்பி புகைப்படம் ஒன்று எடுத்துக்கொண்டனர் அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரவீந்தர் சொல்லி உள்ளது என்னவென்றால் ரவீந்தர் தனது மனைவியுடன் ஹனிமூனுக்கு பிரைவேட் ஜெட்டில் சென்றார் தயவு செய்து அப்படி யாரும் போடாதீங்க டா…

திருச்சி பக்கத்துல டால்மியாபுரம் குலதெய்வ கோயிலுக்கு போறேன் செஞ்சுடாதீங்க இந்த போட்டோவை என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த செய்தி தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் சினிமா பட தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் விமானத்தின் முன்பு நின்று எடுத்துக் கொண்ட அந்த அழகிய புகைப்படத்தை..

mahalaxmi
mahalaxmi