சத்தமே போடாமல் முக்கிய இடத்திற்கு போய் வந்த ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி – இதோ புகைப்படத்தை பாருங்கள்.!

ravindar and mahalaxmi

அண்மை காலமாக சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் பணியாற்றும் பிரபலங்கள்  பலரும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் வெள்ளி திரையில் சூப்பராக ஓடிக்கொண்டிருந்த விக்னேஷ் சிவன் – நயந்தாரா இருவரும்..

ஒரு வழியாக கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி அனைவரது முன்னிலையிலும்  திருமணம் செய்து கொண்டனர் அதன் பிறகு இருவரும் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வருகின்றனர் தொடர்ந்து  ஹனிமூன் போன புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பெரிய அளவில் வைரலானது.  இப்பொழுது அவர்களையே ஓவர் டேக் செய்யும் வகையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி  திருமணம் பெரிய அளவில் பேசப்படுகிறது.

இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் சத்தமே இல்லாமல் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர் அதன் புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலானது தொடர்ந்து இவர்கள் பற்றிய பேச்சுக்கள் மற்றும் புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றன.

ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் அண்மையில் திருச்சியில் உள்ள டால்மியாபுரத்தில் இருக்கும் ரவீந்திர் குலதெய்வ கோயிலுக்கு  சென்று வந்தனர் அதனைத் தொடர்ந்து இந்த ஜோடி ஹனிமூன் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென  ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி சைலண்டாக  திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு வந்தனர்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பரவாயில்லை, நீங்கள் மற்ற பிரபலங்கள் போல் இல்லாமல் முதலில் கோயில் குளம் என போய்விட்டு அதற்கு அப்புறம் ஹனிமூன் போவது ஒரு நல்ல விஷயம் தான் எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி கோயிலுக்கு போயிட்டு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..

ravindar and mahalaxmi
ravindar and mahalaxmi
ravindar and mahalaxmi