தமிழ் சினிமாவில் எத்தனையோ திரை பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டார்கள் அந்த வகையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டவர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்கள் தற்பொழுது தங்களுடைய திருமண வாழ்க்கையை மிகவும் ஜாலியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட பொழுது பலரின் பேச்சுப் பொருளாக இருந்தார்கள்.
இந்த நிலையில் தற்பொழுது ரசிகர்களின் பேச்சுப் பொருளாக இருப்பது சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தான், இதில் மகாலட்சுமி சன் மியூசிக்கில் ஆங்கராக பணியாற்றியவர் அதன் பிறகு சீரியலில் நடிக்க தொடங்கினார் தற்பொழுது இவர் அன்பே வா சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் காதலித்து வந்தார்கள் இரு வீட்டார் சமூகத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.
சமீபத்தில் மகாலட்சுமி சமூக வலைதளத்தில் என்னை எக்காரணத்தைக் கொண்டும் விட்டு விடாதீர்கள் என உருக்கமாக ஒரு பதிவை வெளியிட்டார். இவர்களின் திருமணத்தை பலரும் வாழத்தினாலும் ஒரு சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் ரவீந்தரை வனிதா அடிக்கடி சீண்டி வருகிறார்.
வனிதா என்னதான் நார்மலாக பேசினாலும் ஏதாவது ஒரு சர்ச்சையை சந்தித்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது ரவீந்தரை பேசி உள்ளார். நயன்தாரா மற்றும் விக்கி இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று புகைப்படங்களை பதிவிட்டு வந்த நிலையில் தற்பொழுது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி அடிக்கடி தங்களுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் மகாலட்சுமி பெட்ரூமில் தூங்கும் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு ‘டெலிபோன் மணி போன் சிரிப்பவள் இவளா’ என்ற பாடலை பதிவிட்டுள்ளார். இதுதான் ரவீந்தரனின் தற்பொழுது instagram ஸ்டோரி. ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவருக்குமே ஏற்கனவே முதல் திருமணம் நடைபெற்று இருவரும் விவாகரத்து பெற்றார்கள் தற்பொழுது இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்கள் இருவரும் பிரியாமல் வாழ வேண்டும் என பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.