தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் நடிகை மகாலட்சுமி இவர் தொலைக்காட்சி சீரியலிலும் நடித்துள்ளார், அது மட்டும் இல்லாமல் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளரான ரவீந்தர் அவர்களை கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் திருமணம் குறித்து பல நெட்டிசன்ங்கல் பணத்திற்காக தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டீர்களா என கேள்வி எழுப்பினார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி அடிக்கடி சமூக வலைதளத்தில் பேட்டிகளை கொடுத்து வந்தார்கள் அதில் நாங்கள் மனபூர்வமாக காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம் எனக் கூறினார்கள்
மேலும் இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பெரிய அளவில் வைரலானது திருமணத்திற்கு பிறகும் மகாலட்சுமி சீரியலில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் ரவீந்தர் மிகவும் குண்டாக இருப்பதால் திருமணத்திற்கு பிறகு தான் கண்டிப்பாக தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்கு முயற்சி செய்வேன் என பல பேட்டிகளில் பேசியிருந்தார். அடிக்கடி ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் தங்களுடைய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவார்கள்.
அந்த வகையில் ரவிந்தர் தன்னுடைய மனைவி பற்றி இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் இருவரும் பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளார்கள் அப்பொழுது அந்த ஹோட்டலில் புகைப்படத்தையும் எடுத்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தை வெளியிட்டு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சாப்பாட்டு பக்கீகள் என குறிப்பிட்டுள்ளார்கள். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது.