நடன கலைஞருடன் நெருக்கம் காட்டும் விஜய் டிவியின் குடும்ப குத்து விளக்கு.! ஒருவேளை அதுவா இருக்குமோ.?

raveena-daha
raveena-daha

சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஏராளமான நடிகைகள் தற்போது நன்கு வளர்ந்து தொடர்ந்து சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் பிரபலங்கள் பல இருக்கிறார்கள். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சின்னத்திரையில் கலக்கி வருபவர் தான் நடிகை ரவீனா தஹா.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 7 சி சீரியல் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான நிலையில் அதன் பிறகு விஜய்யுடன் இணைந்து ஜில்லா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். மேலும் ராட்சசன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் பள்ளி படிக்கும் குழந்தையாக நடித்து பிரபலமான நிலையில் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்து வந்த இவர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்வுடன் தான் நடிப்பேன் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மௌன ராகம் 2 சீரியலில் ஹீரோயினாக நடித்து இருந்தார் இதனை அடுத்து சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ரவீனா தொடர்ந்து தன்னுடைய கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.. 18 வயது மட்டுமே ஆகும் ரவீனாவின் போட்டோ ஷூட்டை பார்த்த ரசிகர்கள் வாய்ப்பிலந்து வருகிறார்கள்.

சமீப காலங்களாக சீரியலில் நடிக்காமல் இருந்து வரும் ரவீனா தொடர்ந்து ஏராளமான யூடியூப்பர்களுடன் இருக்கும் வீடியோக்கள் வைரலானது. எனவே கமெண்டில் ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்து வரும் நிலையில் தொடர்ந்து நடன கலைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியாகி வருவதனால் இவர்கள் காதலித்து வருகிறார்களோ என கேள்வி எழும்பியுள்ளது.

அதாவது விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ஜோடி நம்பர் ஒன் 9 சீசனில் பங்குப் பெற்று பிரபலமான ஜோடி தான் ரவீனா தஹா மற்றும் மணி சந்திரா இவர்கள் ஜோடியாக நடனமாடியிருந்தனர். அதன் பிறகு இணைந்து ரீல் செய்வதையும், நடனம் ஆடுவதையும், வெளிநாட்டுக்கு செல்வதையும் தொடர்ந்து வீடியோவாக யூடியூபில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் மணி சந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை ரவீனா பகிர்ந்துள்ளார். இதனை பார்த்தால் ரசிகர்கள் இவர்களுக்குள் ஒருவேளை அப்படி இருக்குமோ என கலாய்த்து வருகின்றனர்.

raveena dhaha
raveena dhaha