Bigg Boss season 7: விஜய் டிவியில் விரைவில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் யார் யார் போட்டியாளர்களாக பங்கேற்க போகிறார்கள் என்று தெரிந்துக் கொள்வதற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர். மேலும் இந்த முறை பல மாற்றங்களுடன் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.
அப்படி முதன் முறையாக பிக்பாஸ் வீடு இரண்டாக இருக்க போகிறது அதேபோல் போட்டியாளர்களாகவும் தரமாக தேர்வு செய்துள்ளனர். அந்த வகையில் ரேகா நாயர், பப்லு பிருதிவிராஜ் போன்ற சர்ச்சை போட்டியாளர்களும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக எப்பொழுதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு காதல் சர்ச்சை எழுவது வழக்கம்.
அப்படி முதல் சீசனில் ஆரவ்- ஓவியாவை, தொடர்ந்து கவின்- லாஸ்லியா, அமீர்-பாவனி என பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் கிசுகிசுப்பில் பல ஜோடிகள் சிக்கி உள்ளனர். அதேபோல் கண்டிப்பாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சியிலும் காதல் ட்ராக் ஏற்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலம் ரவீனா தாஹா போட்டியாளராக களம் இறங்குகிறார். ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலமான இவர் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் சீரியலில் இரண்டாவது பாகத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். மேலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தன்னுடைய ஹாட் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
இதனை அடுத்து சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை வைத்திருக்கும் ரவீனா தான் எங்கு சென்றாலும் அதனை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இவ்வாறு ஆக்டிவாக இருந்து வரும் ரவீனா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இவர் தான் கண்டிப்பாக ஏதாவது சர்ச்சையில் சிக்குவார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.