ஜி பி முத்து உடன் இணைந்து தர லோக்கலாக ரவீனா செய்த செயல்.! கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..

டிக் டாக் செயலி மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அந்த செயலியை வைத்து பலரும் பிரபலமாகி வந்தார்கள் ஆனால் ஒரு கால கட்டத்தில் டிக் டாக் செயலி முடக்கப்பட்டது.  இந்த நிலையில் டிக் டாக் செயலி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர்களில் ஜி பி முத்துவும் ஒருவர். இவர் தன்னுடைய கொச்சையான பேச்சால் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர்.

இவருக்கு ரசிகர்கள் பலரும் லெட்டர் மூலம் பதில் அளித்து வந்தார்கள் அந்த லெட்டரை படித்து ஜி பி முத்து மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். ஜி பி முத்துவை பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள் இந்த நிலையில் சமீபகாலமாக அவருக்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது அதனால் படங்களில் நடிப்பதற்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

பொதுவாக தொலைக்காட்சியில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள் மிகவும் பிரபலம் அந்த வகையில் என்னை அறிந்தால் விசுவாசம் திரைப்படத்தில் நடித்த அணிகா மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் அதேபோல் பேபி ஷாலினி முதல் மீனாவின் மகள் நைனிகா வரை குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்தவர்கள்தான்.

அஜித்தின் விசுவாசம் திரைப்படத்திலிருந்து அணிகா குழந்தை நட்சத்திரமாக மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வளைத்துப் போட்டு வருகிறார் அவரையும் மிஞ்சி வருகிறார் நடிகை ரவீனா. நடிகை ரவீனா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் மௌனராகம் இரண்டாவது தொடரிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரவீனா சமீபத்தில் டிக் டாக் ஜிபி முத்து அவர்களுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் ஜி பி முத்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவரின் டிரேட்மார்க் வசனமான நாக்கு என்ற வசனத்தை சொல்லுமாறு செய்கை செய்தார் ரவீனா. அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோவிற்கு கேப்டனாக நாக்கு  என்று கமெண்ட் செய்திருந்தார் இதை பார்த்து பலரும் கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள் நீங்களும் அவருடன் இணைந்து இதேபோல் செய்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.!

Leave a Comment

Exit mobile version