வித்யாசமான மாஸ் திரைப்படங்களை இயக்கிய ஏராளமான இயக்குனர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார்கள். அதுவும் முக்கியமாக ஒரு சில இயக்குனர்கள் திரைப்படத்தில் அடுத்தடுத்து எதிர்பார்ப்புகள் அதிகளவில் இருப்பது போல் ஏராளமான திரைப்படங்களை இயக்கி வருகிறார்கள்.
அந்த வகையில் உலகநாயகன் தூங்காவனம் சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் நிறைந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா. இவர் ஒரு சிறந்த இயக்குனர் என்றுதான் சொல்ல வேண்டும் எனவே இந்த இரண்டு திரைப்படங்கலிற்கு இருக்க பிறகு இவர் அடுத்து இந்த திரைப்படங்களை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ரசிகர்கள் தற்போதெல்லாம் திரைப்படங்களை விடவும் வெப் சீரியல் பார்ப்பதை அதிகமாக வைத்திருக்கிறார்கள். எனவே திரைப்படங்களை விடவும் சீரியலில் நடிப்பதற்கு அதிகபடியான சம்பளம் தரப்படுவதால் தற்போது உள்ள நடிகர், நடிகைகளும் வெப் சீரியல் பக்கம் திரும்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் ரசிகர்களின் பேவரைட் நடிகர், நடிகைகளாக வலம் வந்த பலரும் வெப் சீரியல் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா வெப் சீரியல் ஒன்றை இயக்கவுள்ளார். இவர் இயக்க உள்ள இந்த வெப் சீரியலில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
தொடர்ந்து ஏராளமான வெற்றித் திரைப்படங்களை தந்து வந்த சுப்ரீம் ஸ்டார் அவ்வபொழுது வெப் சீரியலில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் நடிக்க உள்ள இத்திரைப்படத்தினை தமிழில் ஏராளமான சீரியல்கள் மற்றும் திரைப்படங்களை தயாரித்த ராதிகா சரத்குமாரின் ராடன் குழுமம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ராடன் குழுமம் பல வெற்றித் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களை ஏற்கனவே இயக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.