Ratchasan : நடிகர் விஷ்ணு விஷால் அமலாபால் ஆகியோர் இணைந்து 2018 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ராட்சசன் இந்த திரைப்படம் சைக்கோ திரில்லர் பாணியில் உருவாகி இருந்தது. இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக இயக்கியிருந்தார் இயக்குனர் ராம்குமார், இதற்கு முன்பு ராம்குமார் அவர்கள் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய முண்டாசுப்பட்டி என்ற திரைப்படத்தை இயக்கியவர்.
இப்படி விஷ்ணு விஷாலை வைத்து இரண்டு மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ளார் ராம்குமார் அதிலும் ராட்சசன் திரைப்படம் திரையரங்கில் மிரட்டியது சர்வதேச அளவில் 39 கோடி ரூபாய் வசூலை அள்ளி குவித்தது இந்த நிலையில் அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்த இந்த குழு மீண்டும் இணைந்துள்ளது.
இவர்கள் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் திரில்லர் பாணியில் காதலை மையமாக வைத்து உருவாக இருக்கிறது இந்த திரைப்படத்தின் படபிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது, இதுவரை 20 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்று முடிந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் கதை கொடைக்கானலை மையமாக வைத்து உருவாகியுள்ளதால் படத்தை ராம்குமார் யக்கி வருகிறார். அதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
ஆனால் சமீப காலமாக பல நடிகர்களை வைத்து மல்டி ஸ்டார் திரைப்படங்களை எடுக்கப்பட்டு வெற்றி கண்டு வருகிறார்கள் ஆனால் ராம்குமார் படத்தில் தங்களுக்கு பிடித்தமான நடிகர்கள் இருக்கும் நிலையில் அதற்கான ரசிகர்கள் கண்டிப்பாக திரையரங்கிற்கு வருவார்கள் என நம்பி இருக்கிறார் அந்த வகையில் ராட்சசன் கூட்டணியில் மீண்டும் உருவாகும் இந்த திரைப்படத்தில் மொத்தமாகவே ஆறு கேரக்டர்கள் மட்டும்தான் நடித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
பொதுவாக சினிமாவில் அதிக திரில்லர் படங்கள் வெளியாகி வருகின்றன, அதிலும் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது அந்த வகையில் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டிய திரைப்படம் ராட்சசன் இந்த திரைப்படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.