கைமீறிப் போன ராஷ்மிகாவின் கதாபாத்திரம்..! இதுக்குதான் அப்பவே லவ் ஓகே சொல்லக்கூடாதுன்னு சொன்னது..!

rashmika-mandana
rashmika-mandana

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகைகள் என்றால் அது குறைவுதான் அந்த வகையில் தான் தமிழில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வருவது மட்டுமில்லாமல் தற்பொழுது தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் ஆனது இவர் தமிழில் அறிமுகமான திரைப்படமாக அமைந்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க உள்ளார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை இயக்குனர் வம்சி இயக்கிய வருவது மட்டுமில்லாமல்  திரைப்படத்தை தில் ராஜு அவர்கள் தான் தயாரித்து வருகிறார்.

பொதுவாக ராஷ்மிகா மந்தனா புக்கு இப்படிப்பட்ட திரைப்பட வாய்ப்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர் நடித்த புஷ்பா திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் அவர் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் தற்பொழுது தமிழில் மிகப் பிரபலமான நடிகையாகவும் வலம் வர ஆரம்பித்து விட்டார்.

மேலும் இந்த புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அதிக அளவு பட்ஜெட்  முதலீடு போட்டு எடுக்க உள்ளதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ராஷ்மிகா ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தியும் வெளிவந்துள்ளது அதாவது அவர் நடித்த முதல் பாகத்தில் காதல் காட்சி திருமணம் என அனைத்துமே முடிந்த அதன்காரணமாக இரண்டாம் பாதத்தில் நடிகை ராஸ்மிகா வந்தனாவுக்கு ஒரு சில காட்சிகளே இடம் பெறும் என கூறியுள்ளதன் காரணமாக ரசிகர்களுக்கு மிகுந்த மனவருத்தத்தில் உள்ளார்கள்.