தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் தற்போது ஒரு சில திரைப்படத்தில் நடித்திருந்தாலும் தெலுங்கில் அவர் முன்னணி நடிகையாக வலம் வந்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா அடிக்கடி விஜய் தேவர் கொண்ட உடன் ரஷ்மிகா ஜோடியாக பல்வேறு இடங்களில் கிசுகிசுக்கப்படுவதாகவும் அரசல்புறசலாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் மாலதீவுக்கு பல்வேறு ஜோடிகள் சென்று நேரத்தை செலவழித்து வந்துள்ளார்கள் அந்த வகையில் ராஷ்மிகா மந்தனா பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து மாலதிவு சென்றது பெரும் வைரலாக பரவியது மட்டும் இல்லாமல் அவை மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது.
இந்நிலையில் சமீபத்தில் புத்தாண்டு விழாவை கொண்டாடும் வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா பல்வேறு ரசிகர்களுடன் லைவ் வீடியோவில் பேசியிருந்தார் அப்பொழுது அவர் வாரிசு திரைப்படம் பற்றிய பல்வேறு விஷயங்களை பேசியது மட்டும் இல்லாமல் ரசிகர் ஒருவர் உங்கள் வயது என்ன என்று கேட்டிருந்தார் அப்பொழுது எனக்கு 26 வயது ஆகிறது என்று பதில் அளித்த நேரத்தில் நடிகை ராஷ்மிகா அருகே ஒரு ஆண் நபரின் குரல் கேட்டது.
இவ்வாறு அந்த குரலை கேட்ட பலரும் அவை விஜய் தேவர் கொண்டாவின் குரல் தான் என்று கூறியது மட்டும் இல்லாமல் அவர்கள் இருவரும் ஒன்றாக புத்தாண்டை கொண்டாடிய உள்ளார்கள் என கிசுகிசுக்கப்பட்டது.
VD voice in the background😅😅#VIROSH #VijayDeverakonda #RashmikaMandanna
may be friends or may be something else 😜😜 pic.twitter.com/vYAraniND0— Bharath (@Bharath__b) January 2, 2023