தமிழ்நாட்டு பசங்களை தான் கல்யாணம் பண்ணிப்பேன் ராஷ்மிகா உறுதி.! படையெடுக்கும் இளசுகள்

தற்பொழுது இளசுகளின் க்ரஷ்ஷாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரின் பேசும் பொழுதே முகத்தில் பல பாவனைகளை வெளிப்படுத்துவதால் எக்ஸ்பிரஷன் குயின் என்று அனைவரும் அன்போடு அழைத்து வருகிறார்கள்.

இவர் தொடர்ந்து தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். அந்த வகையில் விஜய் தேவரகொண்டானுடன் இணைந்து நடித்திருந்த கீதாகோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

அதன்பிறகு ராஷ்மிகா மந்தனா எப்பொழுது தமிழ் சினிமாவில் நடிப்பார் என்று ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்து வந்தார்கள். அந்த வகையில் சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து அனைத்து ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி இருந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து இவரும் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா ஒரு தமிழ்நாட்டு பையனை தான் கரெக்ட் செய்து திருமணம் செய்துகொள்ள வேண்டும். அதோடு தமிழ்நாடு இவருக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் தமிழ்நாட்டிலுள்ள சாப்பாடுகளும் பிடித்துள்ளதாக கூறியுள்ளார் எனவே இதனை ரசிகர்கள் மிகவும் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

இவர் சொன்ன மாதிரி பல நடிகைகளை பார்த்துள்ளோம். இப்படி தான் தமிழ்நாட்டு பையனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை கூறி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டு பிறகு பணக்கார தொழிலதிபர்களை பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள்