மூன்று நொடிகளில் காதலில் விழுந்து விட்டேன் ஓப்பனாக கூறிய ராஷ்மிகா மந்தனா.! வைரலாகும் புகைப்படம்.

RASHMIKA MONTHANA
RASHMIKA MONTHANA

கொரோனா என்ற பெரும் தோற்றால் நாம் அனைவரும் நம்முள் இருக்கும் உணர்வுகளை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு நிலைமையில் இருந்து வருகிறோம். அதோடு இந்த கொரோனா நாம் அனைவரின் வாழ்க்கையும் புரட்டிப் போட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் எப்பொழுதும் பிஸியாக இருந்து வந்த திரைப்பிரபலங்கள் தற்போதைய வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைமைக்கு வந்துள்ளது.  இந்நிலையில் அனைத்து நடிகர், நடிகைகளும் மன அழுத்தத்தை குறைப்பதற்காக தொடர்ந்து ரசிகர்களிடம் லைவ் சட்டில் பேசுவது அல்லது போட்டோ ஷூட் நடத்துவது போன்றவற்றை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த கீதாகோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்ட அவர்தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. சினிமாவில் டாப் ஹீரோயினாக வந்து கொண்டிருக்கும் இவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவர் தொடர்ந்து பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதன்காரணமாக தமிழ் ரசிகர்கள் இவர் எப்பொழுது தமிழ் திரைப் படங்களில் நடிப்பார் என்று எதிர் பார்த்து வந்தார்கள். அந்த வகையில் சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து இன்னும் தமிழ் திரைப்படங்களில் நடித்து ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனது நாயுடன் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

அதில் ஏய், நண்பர்களே இங்கே உள்ள அனைத்துக் குழப்பங்களுக்கும் நடுவே எனது  மகிழ்ச்சியை கண்டடைந்தேன்.. இது முழு நேரமும் என்னை உற்சாகமாக வைத்திருக்கிறது.. என் செல்லத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் இவள் பெயர் ஆரா.. மூன்று வினாடிகளில் காதலில் விழுந்தேன் என்று சொல்வார்களா இல்லையா.. ஆனால் என் இதயத்தை 0.3 மில்லி விநாடிகளில் உருகி விட்டாள். என்று கூறியுள்ளார் ராஷ்மிகா.

dog
dog