அசுர வளர்ச்சியில் ராஷ்மிகா மந்தன்னா – தெலுங்கு டாப் நடிகை, நடிகர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம்.! எந்த விசயத்தில் தெரியுமா.?

rashmika-madanna
rashmika-madanna

சினிமாவுலகில் நடிகர், நடிகைகள் போட்டி போட்டுக் கொள்கிறார்களோ இல்லையோ அவரது ரசிகர்கள் எல்லாவிதத்திலும் போட்டுக் கொடுக்கிறார்கள். யார் படம் அதிக வசூல், யார் படம் அதிக ஓடியது என எதையாவது ஒரு காரணத்தை வைத்து போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

இவர்கள் தான் இப்படி என்றால் பிரபல பத்திரிகையாளர்களும் இந்த நடிகைதான் நம்பர் ஒன் இவர்கள்தான் ரசிகர்கள் பட்டாளத்தை அதிகமாக வைத்திருக்கிறார்கள் என எதையாவது ஒன்றை சர்வே என்ற பெயரில் எடுத்து வெளியிடுகின்றனர் இதன் மூலமாகவும் ரசிகர்கள் மோதிக் கொள்கின்றனர் அப்படி தான் தற்போது இந்திய சினிமா உலகில் பல முன்னணி நடிகர், நடிகைகள் இருக்கின்றனர்.

அவர்களில் யார் தற்போது செல்வாக்குமிக்க பிரபலம் என்ற லிஸ்டை வெளியிட்டுள்ளது. லிஸ்டில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் தான் தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா இவர் நடிப்பையும் தாண்டி தனது க்யூட் ரியாக்சன் மூலமும் பல்வேறு விதமான ரசிகர்களையும் இவர் கவர்ந்துள்ளார் அதனால்தான் தற்போது இவர் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.

சமூக வலைதளப் பக்கத்தில் அவரை பின்தொடர்ந்து எண்ணிக்கையை வளர்ச்சி விகிதம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது மேலும் கடைசியாக இவர் போட்ட 25 பதிவுகளுக்காக அவர் பெற்ற லைக்குகளையும், கமெண்டுகளை அடிப்படையில் தான் இந்த பட்டியல் தயாரித்து உள்ளனராம். இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் விஜய் தேவர்கொண்டா, 3வது இடம் கேஜிஎப் யாஷ், 4 வது இடம் சமந்தா, 5வது இடம் அல்லி அர்ஜுன் என ஒவ்வொருவரும் அடுத்த அடுத்த இடத்தை பிடித்துள்ளனர்.

அதிலும் சமீப காலமாகத்தான் ராஷ்மிகா மந்தனா வளர்ச்சி அதிகரித்து உள்ளது என பலரும் கூறுகின்றனர். மேலும் தற்போதைய தெலுங்கு சினிமாவின் தாண்டி இந்திய அளவில் பல்வேறு படங்களை கைப்பற்றி நடித்து ஓடிக்கொண்டிருப்பதால் இவருக்கு எல்லா இடத்திலும் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.