தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தொடர்ந்து பல மொழித் திரைப்படங்களில் நடித்து சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழில் சுல்தான் திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
சுல்தான் திரைப்படத்தை தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இத்திரைப்படத்தை சுகுமார் இயக்குகிறார்.
எனவே ரசிகர்கள் இத்திரைப்படத்தைப் பற்றி ராஷ்மிகா மந்தனாவிடம் லைவ் சேட்டில் பேசி வந்தார்கள். அவ்வப்பொழுது ராஷ்மிகா மந்தனா புஷ்பா திரைப்படம் மிகவும் நன்றாக உருவாகி வருகிறது.இத்திரைப்படம் மிகவும் சுறுசுறுப்பாகவும் கொரானா பாதுகாப்புடனும் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது என்றும் இந்த திரைப்படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றும் கூறியிருந்தார்.
புஷ்பா திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இதனைத் தொடர்ந்து இத்திரைப்படம் ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று ரிலீசாக உள்ளது. அதோடு மிகவும் முக்கியமாக இத்திரைப்படம் ஆக்சன் திரில்லர் கலந்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவிடம் ரசிகர்கள் அல்லு அர்ஜுனனை பற்றிக் கூறுங்கள் என்று கேட்டதற்கு அவர் மிகவும் எளிமையானவர், இனிமையானவர் என்று இரண்டே வார்த்தையில் பதில் அளித்துள்ளார். தற்பொழுது இந்த தகவல் தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.