நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவரை காதலிக்க தொடங்கினார். முதலில் இவர்களின் உறவு நட்பாகத்தான் தொடங்கியது பின்னர் காதலாக மாறி நிச்சயதார்த்தம் வரைச் சென்று நின்று போனது.
அதற்கு காரணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு இரண்டு வருடத்திற்கு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்தார்கள் அதுதான் அவர்கள் வாழ்க்கையை மாற்றியது. இந்த இடைப்பட்ட காலத்தில் ராஷ்மிகா மந்தனா மிகப் பெரிய நடிகையாக உருமாறினார்.
அதனால் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணத்தை நிறுத்தி விட்டார்கள், இந்தநிலையில் ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் விரைவில் அறிமுகமாக இருக்கிறார். மேலும் தமிழில் கார்த்தியுடன் நடித்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய முதல் 100 மில்லியன் பாடல் இதுதான் என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
அதைப் பார்த்த தன்னுடைய முன்னாள் காதலன் ரக்ஷித் ஷெட்டி என்பவர் அந்தப் பதிவிற்கு பதில் அளித்துள்ளார் அவர் பதில் அளித்தது என்னவென்றால் மேலும் மேலும் உயர வேண்டும் என வாழ்த்து கூறியுள்ளார். அதற்கு ராஷ்மிகா மந்தனா உடனடியாக பதில் அளிக்காமல் மவுனம் காத்து வந்த பின்பு அவர் போட்ட பதிவிற்கு வெறும் சுமைலி ஒன்றை மட்டும் பதிவிட்டுள்ளார்.
இந்தநிலையில் ராஷ்மிகாவின் எமோச் பதிவிற்கு எதிர்மறையான விமர்சனங்கள் ரசிகர்களிடம் எழுந்துள்ளது அதுமட்டுமில்லாமல் ரக்ஷித் ஷெட்டி அவருக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள். மேலும் ராஷ்மிகா மந்தனா அவர்கள் புகழ் போதையில் ஆடுகிறார் என்ன நடக்க போகிறதோ என கமெண்ட் செய்துள்ளார்கள் ரசிகர்கள்.