தென்னிந்தியா சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட பெண்ணாக இருந்தாலும் தெலுங்கு சினிமா தான் இவருக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு வெற்றி படங்களை கொடுத்தார்.
அந்த வகையில் டியர் காம்ரேட், கீதகோவிந்தம் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக மாறின அதனைத் தொடர்ந்து நடித்த படங்களும் வெற்றி படங்களாக வெளிவந்தன இதனால் அவருக்கென ஒரு ரசிகர்கள் உருவாகியதோடு தென்னிந்தியாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ் பக்கம் வந்தார். இவர் நடித்த சுல்தான் படம் வெற்றியை பெறவில்லை அதனைத் தொடர்ந்து தற்பொழுது தளபதி 66 வது திரைப்படமான வாரிசு படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி வருகிறார்.
இப்படி இருக்க இவர் தெலுங்கில் புஷ்பா 2 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் முதல் பாகத்தில் 1 கோடி சம்பளம் வாங்கிய இவர் இரண்டாவது பாகத்திற்காக 4 கோடியை சம்பளம் உயர்த்தி தந்தனர். இதனால் செம சந்தோஷத்தில் இருந்த ராஷ்மிகா மந்தனா திடீரென ஒரு கோடியை அதிகமாக்கி தற்பொழுது ஒரு படத்திற்கு 5 கோடி கேட்கிறாராம்.
முன்னணி நடிகைகள் பலரும் ஒவ்வொரு படம் நடிக்கும் போது தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகின்றனர் அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா இப்பொழுது பண்ணி உள்ளார். இதனால் தென்னிந்திய சினிமாவே ஆச்சரியத்தில் உள்ளதாம். தயாரிப்பாளர்கள் பலரும் நான்கு கோடி சம்பளம் போதாதா.. இன்னும் ஒரு கோடியை ஏத்திட்டீங்க. எனக் கூறி புலம்பி வருகின்றனர் இந்த செய்தியை இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது.