தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கி தற்பொழுது தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவர் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இந்த படத்தினை தொடர்ந்து தற்பொழுது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ராஸ்மிகா மந்தனா பிரபல முன்னணி நடிகரான விக்ரம் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் அதில் நடிப்பதை தவிர்த்து இருக்கிறார்.
அது குறித்த தகவல் தான் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. அதாவது நடிகை ராஷ்மிகா மந்தானா தற்போது விஜயின் வாரிசூ, புஷ்பா 2, ஹிந்தி படங்கள் இரண்டு என தொடர்ந்து திரைப்படங்களை நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் விக்ரம் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
எனவே தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் ஆந்திராவில் உள்ள கடப்பா என்ற பகுதியில் படபிடிப்பு நடைபெற்று வருகிறது இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த மாளவிகா மோகன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்பொழுது ராஷ்மிகா மந்தனா ஏன் விக்ரம் திரைப்படத்தில் நடிக்கவில்லை என்பது குறித்து விசாரிக்கும் பொழுது ராஷ்மிகா மந்தானா தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருவதால் கால் சீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம் இதன் காரணத்தினால் தான் அவர் முன்பு இந்த திரைப்படத்தின் நடிப்பதற்காக ஒப்புக்கொண்டு பிறகு கால்ஷீட் இல்லாத காரணத்தினால் அவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகி உள்ளார்.