இப்படியும் புடவைக் கட்டலாமா.? வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்திய ராஷ்மிகா..

rashmika mandanna
rashmika mandanna

தற்போது உள்ள இளம் நடிகை முதல் பிரபல நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். இதன் மூலம் இவர்களின் அழகிய புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் லைக்குகளை போட்டு அவர்களை பிரபலம் அடைய செய்து வருகிறார்கள்.

அந்தவகையில் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். தற்பொழுது உள்ள இளைஞர்களின் ஃகிரஷ்ஷாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவர் எப்பொழுது தமிழில் திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கார்த்திக் நடிப்பில் நேற்று வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.

சுல்தான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. ஆனால் ஒரு சிலர் தெலுங்கு சினிமாவில் இருந்து சில காட்சிகள் காப்பி அடிக்கப்பட்டுள்ளது என்றும் கூறி வருகிறார்கள். இத்திரைப்படத்தை தொடர்ந்து ராஷ்மிகா தமிழில் இன்னும் பல படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா சிவப்பு நிற புடவையில் மிகவும் அழகாக இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

rashmika mandhana
rashmika mandhana