தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்துவரும் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது பான் இந்திய நடிகையாக மாறிவிட்டார் இவர் கைவசம் தமிழ் மற்றும் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து உள்ளார்.
மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் அவர்களின் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஆம் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படபிடிப்பு முடியும் தருவாயில் உள்ளதால் இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த பொங்களுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நடிகை ராஸ்மிகா நடித்து கடந்த ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
புஷ்பாபு படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் நடிகை ராஸ்மிகா மந்தனா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.
மேலும் நடிகை ராஸ்மிகா மந்தனா ஹிந்தியில் இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார் அதன்படி சித்தர் திராவுக்கு ஜோடியாக மிஷன் மஜ்னு என்ற படத்திலும் அமிதாப் பச்சன் நடிக்கும் குட் பாய் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதில் குட் பாய் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது அக்டோபர் மாதம் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தில் இருந்து வீடியோ பாடல் ஒன்றை தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நடிகை ராஸ்மிகா மந்தனா இரவு பார்ட்டிக்கு சென்று மூச்சு முட்ட குடித்துவிட்டு தனது தோழிகளுடன் குத்தாட்டம் போடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஹிக் சாங் என பெயரிடப்பட்டுள்ளது இந்த பாடலை அமித் திரிவேதி அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ பாடல்.