என்ன சிம்ரன் இதெல்லாம் ராஷ்மிகா மந்தனா புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..

rashmika mandhanna

Rashmika Mandanna: நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் ரன்வீர் கபூர் இருவரும் இணைந்து அனிமல் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு  வெளியிட்டுள்ளது. கன்னடத்தில் வெளியான க்ரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான ராஷ்மிகா மந்தனா காந்தாரா படத்தின் மூலம் படித்தொட்டி எங்கும் பிரபலமானார்.

இவ்வாறு முதல் படத்தின் வெற்றினை தொடர்ந்து விஜய் தேவரகொண்டனுடன் இணைந்து கீதா கோவிந்தம் படத்தின் நடித்திருந்தார் இது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது. இவ்வாறு பிரபலமான இவருக்கு தமிழில் கார்த்தி உடன் இணைந்து சுல்தான் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

மேலும் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்பொழுது ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அப்படி அமிதாப் பச்சனுடன் இணைந்து Goodbye எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

animal movie
animal movie

இதனை அடுத்து தற்பொழுது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் அனிமல் என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. கடந்த வாரம் இப்படத்தின் டீசர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இந்த டீசரை தொடர்ந்து படக்குழு இப்படத்தின் முதல் பாடலை வெளியிட திட்டமிட்டு இருக்கும் நிலையில் அதற்கான அறிவிப்பை ரன்வீர் கபூர், ராஷ்மிகா இருவரும் ரொமான்டிக்காக முத்தக்காட்சி உடன் இருக்கும் போஸ்டரை படக் குழு வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பாலிவுட்டுக்கு போனதும் இப்படி மாறிட்டிங்களே என கூறி வருகின்றனர்.