அந்த கிரிக்கெட் வீரர் மீது கிரஷ் இருக்கிறது உண்மை தான்.. கண்ணடித்து சொன்ன ரஷ்மிகா மந்தனா.. வைரலாகும் புகைப்படம்

rashmika-mandanna

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. முதலில் க்ரிக் பார்ட்டி என்னும் படத்தில் நடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து கீதகோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தோடு மட்டுமில்லாமல் ரசிகர்களையும் உருவாக்கியது.

அதன் பிறகு இவர் நடிக்கும் ஒவ்வொரு படமுமே பெரிய வசூலை அள்ள ஆரம்பித்தது ஏன் கடைசியாக இவர் நடித்த வாரிசு, புஷ்பா போன்ற படங்கள் 300 கோடி வசூல் செய்தன. இதனால் இவருடைய அதிகரித்து உள்ளதால் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். இப்பொழுது கூட புஷ்பா 2 மற்றும் ஹிந்தியில் அனிமல் என்னும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

திரை உலகில் வெற்றி கண்டு வரும் அவ்வபோது கிசுகிசுவில் சிக்குவது வழக்கம் அந்த வகையில் நடிகர் விஜய் தேவர் கொண்டவுடன் ஜோடியாக இவர் டியர் காம்ரேட் கீதகோவிந்தம் படங்களில் நடித்து வெற்றி கண்ட பிறகு இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக பலரும் கிசு கிசுத்தனார் ஆனால் இந்த ஜோடி நாங்கள் அப்படியெல்லாம் கிடையாது நல்ல நண்பர்கள் என கூறி வருகின்றனர்..

இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றிக்கு தாறுமாறான உடைகள் சென்று இருக்கிறார் அப்பொழுது இவரை பார்த்த ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் சூழ்ந்து கொண்டனர். உங்களுக்கு கிரிக்கெட் வீரர் சுமன் கில் மீது கிரஷ் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.

rashmika mandanna
rashmika mandanna

இதற்கு சற்றும் தயங்காமல் ராஷ்மிகா பதிலளித்தது தான் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது அதில் அவர் சொன்னது என்னவென்றால் ஆம் எனக்கூறி கண்ணடித்து உள்ளார். தன்னைவிட குறைந்த வயதில் இருக்கும் வீரர் மீது கிரஷ் இருப்பதாக ராஷ்மிகா மந்தனா சொல்லி உள்ளது சோஸியல் மீடியவில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த  வீடியோவை நீங்களே பாருங்கள்