தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா இவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் கைவசம் தற்போது ஒரு சில திரைப்படங்கள் இருந்து வருகிறது. அதிலும் இவர் நடிப்பில் வெளியாகிய புஷ்பா திரைப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்து வருகிறது.
புஷ்பா திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் ரசிக்கும்படி அமைந்தது அது மட்டுமில்லாமல் இவர் அந்த படத்தில் சாமி சாமி பாடலுக்கு நடனமாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கட்டி இழுத்தார். இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக விஜய்யின் 66 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.
பொதுவாக ராஷ்மிகா மந்தனா தான் நடிக்கும் திரைப்படங்களில் அதிகமாக ஹோம்லியாக தான் நடித்துள்ளார் ஆனால் கதைக்கு தேவை என்றால் சட்டென முத்தக் காட்சிகள் கிளாமர் காட்சி என சற்றும் யோசிக்காமல் களம் இறங்கி விடுவார் அந்த வகையில் புஷ்பா திரைப்படத்திலும் கொஞ்சம் கிளாமர் காட்டி நடித்து இருந்தார்.
இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருவார் அந்தவகையில் தற்போது பிரபல மேகஸின் அட்டைப்படத்திற்கு கொடுத்துள்ள போஸ் தான் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
ஏனென்றால் அந்த அட்டை படத்திற்கு கவர்ச்சியில் எல்லை மீறியுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.