தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து கலக்கி வருபவர் தான் நடிகர் கார்த்திக். இவர் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து ஏராளமான நல்ல காரியம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் பெரும்பாலும் இவர் கிராமத்து கதைய அம்சமுள்ள திரைப்படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்.
அந்த வகையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் விருமன். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற 30ஆம் தேதியன்று இந்தியாவில் உள்ள பல திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தினை மணிரத்தினம் இயக்க நடிகர் கார்த்திக்கை தொடர்ந்து ஜெயம் ரவி, விக்ரம், பார்த்திபன், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரபலங்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.
மேலும் அனைத்து பிரபலங்களும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக வெளிநாடுகள் சென்று வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இவருடைய நடிப்பில் சமீப காலங்களாக வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தினை தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
கார்த்திக் ஜப்பான் படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த படத்தை பற்றிய புது அப்டேட் வெளியாகி உள்ளது. விருமன், பொன்னியின் செல்வன் படத்தினை தொடர்ந்த அடுத்ததாக கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு சர்தார் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் போலீஸ், வயதான தோற்றம் என இரண்டு கேரக்டர்களிலும் நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து ரஜிஷா விஜயன், ராஷிக் கண்ணா, லைலா உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கார்த்தியின் ஜப்பான் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படம் கார்த்தியின் 24வது படம் மேலும் ராஜமுருகன் இந்த படத்தினை இயக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது இதற்கு முன்பு கார்த்தி கூட நினைந்து சுல்தான் திரைப்படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.