தென்னிந்திய சினிமாவில் உள்ள பல்வேறு மொழி படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக விஸ்வரூபமெடுத்து உள்ளவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவர் புஷ்பா என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படம் டிசம்பர் 17ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது மேலும் புஷ்பா திரைப்படம் தெலுங்கையும் தாண்டி தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது இந்த படத்தில் தெலுங்கு டாப் ஹீரோ அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு பரிசு கொடுத்துள்ளார் அந்த பரிசு பெட்டியில் சாக்லெட் மற்றும் சில பரிசு பொருள்கள் இருந்தன மேலும் ஒரு கடிதமும் இருந்தது.
அந்த கடிதத்தில் புஷ்பா திரைப்படம் எனக்கு மிகவும் நெருக்கமானது இத்திரைப்படத்தின் மூலம் எனக்கு நீங்கள் எனக்கு சிறந்த நண்பர் ஆகிவிட்டீர்கள் என்னுடைய நல்ல நண்பருக்கு என்னுடைய சின்ன பரிசு என ராஷ்மிகா மந்தனா அதில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த நடிகர் அல்லு அர்ஜுன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இச்செய்தி தற்போது இணையதளத்தில் வேகமெடுத்து உள்ளதோடு மக்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.