அண்மைக்காலமாக சினிமா நடிகைகள் தொடர்ந்து சம்பளத்தை ஏற்றி வருகின்றனர் அந்த வகையில் ராஷ்மிகா மந்தனா இதுவரை ஒன்றரை கோடி சம்பளம் வாங்கி வந்த நிலையில் தற்போது அவரும் சம்பளத்தை ஏற்றி உள்ளார். ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து தென்னிந்திய அளவில் பிரபலமடைந்தார்.
தமிழில் இவர் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படம் இவருக்கு பெரிய அளவு வெற்றியை ருசிக்கவில்லை இருப்பினும் நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறினார். அதுபோல தற்போது விஜயின் வாரிசு படம் ராஷ்மிகா மந்தனாவுக்கு செல்ல அந்த கதை ரொம்ப பிடித்துப் போகவே தற்பொழுது அந்த படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என பட குழு திட்டவட்டமாக சொல்லி உள்ளது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் நடிகை ராஷ்மிகா மந்தனாக்கு ஹிந்தியிலும் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறதாம்.
அதில் குட் பாய் மற்றும் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.
அதாவது இனி படத்திற்கு சுமார் 4 கோடி சம்பளம் வாங்க இருக்கிறாராம் அந்த வகையில் புஷ்பா 2 மற்றும் ஹிந்தி படங்களுக்கு அவர் 4 கோடி சம்பளம் வாங்குவார் என கூறப்படுகிறது. மற்ற முன்னணி நடிகைகள் போல இவரும் சம்பளத்தை உயர்த்தி உள்ளது தற்பொழுது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.