தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கிரஷ்ஷாக இருந்து வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா இவ்வாறு பிரபலமான நமது நடிகை கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் அந்த அழகுக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது அந்த வகையில் இவரின் ரியக்ஷனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து விட்டார்கள்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். இவ்வாறு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
பொதுவாக நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் கவனம் செலுத்துவது மட்டுமில்லாமல் அதிக அளவு திரைப்பட வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தளபதி விஜயுடன் முதன்முதலாக இணைவது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை உருவாக்கியது மட்டுமில்லாமல் சமீபத்தில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவையும் ராஷ்மிகா வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் அவர் வெளியிட்ட பதிவை பார்த்து ரசிகர்கள் தேவையில்லாத வார்த்தைகளை போட்டு கிண்டலடித்து வருகிறார்களாம் அதாவது அவர் போட்ட பதிவு என்னவென்றால் என்னுடைய பெயர் நீளமாக ராஷ்மிகா மந்தனா என்று இருக்கிறது ஆகையால் சுருக்கமாக நீங்கள் ரஷ் என்று அழையுங்கள் என கூறியுள்ளார்.
இவ்வாறு நீங்கள் அழைத்தால் நான் எதுவும் நினைக்க மாட்டேன் என்பதையும் அந்த பதிவில் சேர்ந்து பதிவிட்டு உள்ளாராம். இதனால் அவர் போட்ட பதிவை கிண்டல் செய்யும் வகையில் பிரஷ், கிரஷ் என சகட்டு மேனிக்கு வார்த்தைகளை ரசிகர்கள் கொட்டித் தீர்த்து வருகிறார்கள்.