நடிகை ராஷ்மிகா மந்தனா நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பதால் அவரது சினிமா மார்க்கெட்ட நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது முதலில் இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அங்கு டியர் காம்ரேட் கீத கோவிந்தம் போன்ற படங்களை கொடுத்து பிரபலமடைந்தார்.
அதன் பிறகு பிற மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் தமிழில் முதலில் சுல்தான் படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படமே இவருக்கு தோல்வி படமாக அமைந்தது. அடுத்த படம் தமிழில் நல்ல படமாக கொடுக்க வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அவரை நோக்கி வான்டடாகவே ஒரு படம் வந்தது அது தான் விஜயின் வாரிசு படம்.
வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அதில் சந்தோஷத்துடன் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு தற்பொழுது ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது.
வாரிசு, புஷ்பா 2 ஆகிய திரைப்படங்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு தனுசுடன் இவர் கைகோர்த்து நடிகை இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது தனுஷ் தற்போது வாத்தி திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வெகுவிரைவிலேயே திரைக்கு வர இருக்கிறது.
இதை தொடர்ந்து தனுஷ் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்மூலா இயக்கம் படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படம் 1980களில் நடந்த அரசியல் பின்னணியை மையமாக வைத்த ஒரு கதை என கூறப்படுகிறது இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நந்தனா ஒப்பந்தம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது அதற்கான பேச்சுவார்த்தைகள் தான் தற்பொழுது நடைபெற்று வருகிறதாம்.