தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவர் கன்னட சினிமாவின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல மொழிகளில் நடித்து இந்திய அளவில் பிரபலம் அடைந்துள்ளார்.
இவர் தெலுங்கு திரைப்படத்திலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கலக்கி வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்ததால் ரசிகர்கள் எப்பொழுது ரஷ்மிகா தமிழ் திரைப் படங்களில் நடிப்பார் என்று ஏங்கி வந்தார்கள்.
அதனை நிறைவேற்றும் வகையில் சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார்.இத்திரைப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் தற்பொழுது உள்ள இளைஞர்களின் ஃகிரஷ்ஷாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதோடு ரஸ்மிகாவை அனைவரும் எக்ஸ்பிரஷன் குயின் என்று தான் அழைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் ரஷ்மிகா தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது மிகவும் அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.