பல விலை உயர்ந்த கார்களை வைத்திருக்கும் ராஷ்மிகா மந்தனா.! என்னென்ன கார் தெரியுமா.?

rashmika-monthana-1

ஒரு சில நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகும் தனது முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பு திறமை மற்றும் அழகினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து விடுவார்கள். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் தற்பொழுது உள்ள இளைஞர்களின் ஃகிரஷ்ஷாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதோடு இவருக்கு எக்ஸ்பிரஷன் குயின் என்ற பெயரும் பொருந்தும் ஏனென்றால் இவர் பேசும் பொழுது பல பாவனைகளை வெளிப்படுத்துவதால் இவரை எக்ஸ்பிரஷன் குயின் என்று அழைத்து வருகிறார்கள்.

இவர் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.  இதனைத் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

பிறகு விஜய் தேவரகொண்டாணுடன் இணைந்து நடித்து இருந்த கீதாகோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். இவர் தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வந்ததால் எப்பொழுது தமிழில் நடிப்பார் என்று ஏங்கி வந்தார்கள்.

அந்த வகையில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா  இரண்டு நாட்களுக்கு முன்பு தனது 25 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

இவர் சினிமாவிற்கு அறிமுகமாகி இதுவரையிலும் ஏழு வருடங்கள் ஆகிவிட்டது.அந்தவகையில் பல லக்சரி கார்களுக்கு சொந்தக்காரி வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் எந்த எந்தக் கார் வைத்துள்ளார் என்ற லிஸ்டை தற்போது பார்ப்போம்.

1. ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி: இவர் கீதாகோவிந்தம் திரைப்படத்தில் நடிக்கத் துவங்கும் பொழுது இந்த காரை வாங்கி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.இந்த காரின் விலை சுமார் ஒரு கோடி ஆகும்.

xrashmika-mandanna-01-1
xrashmika-mandanna-01-1

2. ஆடி க்யூ3: இவர் வாங்கிய முதல் லக்சரி கார் இது தான் என்று கூறப்படுகிறது. இந்த காரை 2017ஆம் ஆண்டு ரூ.34.97 லட்சத்திலிருந்து ரூ.43.61 விலைக்கு இந்த காரை வாங்கினாராம்.தற்போது இந்த கார் விற்பனைக்கு வருவதில்லை.

xrashmika-mandanna-1-16

3. மெர்சிடிஸ் பென்ஸ் சி- கிளாஸ் : இந்த காரில் ஒரு முறை ராஷ்மிகா மந்தனா ரைடு வந்துள்ளார் அந்த புகைப்படங்களை இணையதளத்தில் வைரலானது. இந்த காரின் விலை ரூபாய் 50 லட்சம் ஆகும்.

xmercedes-benz-c-class-rear-profile-

இதோடு இன்னோவா, ஹூண்டாய் க்ரெட்டா போன்ற கார்களையும் ராஷ்மிகா வந்தனா வைத்துள்ளார் இந்த காரர்கள் சுமார் ரூ.17 லட்சம் ஆகும்.